January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு!

Earth Quake common Images

இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 1.8-2.00 ரிச்டர் அளவுகளுக்கு இடையே பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று (16) பிற்பகல் 4.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மக்கள் இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நில அதிர்வு பசறை, லுணுகல பிரதேசத்திலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.