
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது தொடர்பான தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையதத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக தான் வெளியிட்ட அறிக்கையின் கருத்திலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டு மக்கள் உருவாக்கிய கட்சி, மக்கள் நலனுக்காகவே செயற்படும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிடம் இரகசிய கலந்துரையாடல்கள் இல்லை என்றும் கட்சி அனைத்து விடயங்களையும் வெளிப்படையாகவே மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு துறைசார் அமைச்சரே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அதுதொடர்பாக தான் வெளியிட்ட நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.