
இலங்கையில், கிணற்றுக்குள் வீழ்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிணற்றுக்குள்ளேயே குழந்தையை பிரசவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
றம்புக்கன பத்தாம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (15) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
28 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண் வீட்டில் காணப்படாமையை அடுத்து அவரது உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
இதன்போது அவர் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீழ்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராமத்தினர் குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவருக்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது கிணற்றுக்குள் குழந்தை பிறந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கிணற்றுக்குள் பொலிஸார் முன்னெடுத்த தேடுதலின்போது சிசு மரணித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாயின் நிலை தொடர்பிலும் அவர் கிணற்றில் விழுந்தமைக்கான காரணம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.