வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சி தயாராகிறது.
அமைச்சர் கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைச்சரே பொறுப்பு எனக் கூறியே, இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர் கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் சில உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.