July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங்கின் பெயர் பரிந்துரை

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி ஜியூன் சுங்கை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

ஜூலி ஜியூன் சுங், இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சுங், கலிபோர்னியா சான் டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார்.

தற்போது இவர், அமெரிக்க வெளியுறவு ஆலோசகராகவும், இராஜாங்க திணைக்களத்தின் பதில் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இதற்கு முன்னர் கம்போடியா, தாய்லாந்து, இரான், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இந்நிலையில் ஜூலி ஜியூன் சுங்கை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இதன்படி செனட் சபை நியமனத்தை உறுதிசெய்தால் ஜூலி சுங் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவார்.

தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவராக 2018 நவம்பர் முதல் அலைனா டெப்லிஸ் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.