January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர்கள் ஐவர் பலி

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 5 கொவிட்-19 நோயாளிகள் செவ்வாய்க்கிழமை (15) இரவு 9 மணிவரையான 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையை சேர்ந்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும் புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும் பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும் கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.