நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை நிறுத்த வேண்டுமாயின், மாற்றீடுகளை முன்வைக்க வேண்டும் என்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்போடு ஏற்பட்ட சர்ச்சைக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான தீர்மானம் புரிந்துணர்வுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எரிபொருள் விலைகளை தடுமாற்றத்தில் அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை அதிகரிப்பை நிறுத்த வேண்டுமாயின், இதனை விமர்சிப்பதற்குப் பதிலாக மாற்றீடுகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.