January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் விவகாரம்: பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கல் ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் உள்ள கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று (15) ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய முதற்கட்டமாக கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 9 ஆயிரத்து 883 பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மீனவ குடும்பங்களுக்காக 5,000 ரூபா இழப்பீட்டை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் 6,042 குடும்பங்களும், வத்தளையில் 1,409 குடும்பங்களும், கட்டானையில் 233 குடும்பங்களும்,
ஜா-எலயில் 69 குடும்பங்களும் இந்த இழப்பீட்டு தொகையை பெறவுள்ளனர்.

இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி தமக்கு கிடைத்துள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் மேலும் தெரிவித்துள்ளார்.