இலங்கையில், தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகலாம் என சுகாதார சேவை தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், உறுதிப்படுத்தப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராகம போதனா வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களுடன் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் இப்போது பயணக்கட்டுப்பாடு அமுல் படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துப்படி இது தேவையானது மற்றும் மிகவும் நல்லது.ஆனால் நாட்டு மக்களுக்கு இதனால் பல சிரமங்கள் உள்ளன.
எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கும் போது இவ்வாறு சிக்கல்கள் தோன்றும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டார்.