(FilePhoto)
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாட ஆர்.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் தலைவர்கள் நாளை (16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.
நாளை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அதேநேரம் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு செயற்பாடுகளை முன்கொண்டு செல்லும் விதத்தில் ஜனாதிபதியுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், குறிப்பாக புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை கட்சிகள் பெற்றுக்கொடுக்கும் விதத்தில் கடந்த டிசம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவர்களின் அழைப்பின் பெயரில் சந்திப்பும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.