
PICT0038
வவுனியா நகரசபைத் தலைவர் இ. கௌதமன் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வாடிவீடு வளாகத்திற்கு சென்ற நகரசபைத் தலைவர், அதற்கு சீல் வைத்திருந்தார்.
இதன்போது, அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு ஊழியருடன் நகரசபைத் தலைவர் முரண்பட்டதாக தெரிவித்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நகரசபைத் தலைவர் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.