
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் பாரிய திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய 32 அடி நீளமான இந்த திமிங்கலத்தை இன்று (15) காலை மீனவர்கள் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், காவல்துறையினர் வருகை தந்து பார்வையிட்டதுடன்,விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.