ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.
15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் இவர் திறம்படக் கடமையாற்றியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நியமனம் பெறுவதற்கு முன்னர், மேனகா மூக்காண்டி ‘தமிழ்மிரர்’ பத்திரிகையின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார்.