January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்!

பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பசறை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

மேற்படி மூவரும் பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண அமைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதில் 71 வயதுடைய தந்தை இன்று (15) மரணமடைந்துள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் (வயது 72) 22 வயது மகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளனர்.