இலங்கையின் முன்னணி கோதுமை மா விற்பனை நிறுவனமாகிய பிரீமா தனது உற்பத்தி கலவையில் ஒன்றாகிய மில்க் பிரேண்ட் என்ற மாவின் விலையை 3 ரூபா 50 சதத்தினால் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இன்று தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலில் உள்ளதாக அந்த நிறுவனம அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் 50 கிலோ பிரீமா மில்க் பிரேண்ட் மாப் பொதியின் விலை 4175 ரூபாவாகவும், ரொட்டி செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மில்க் பிரேண்ட் என்ற மாப் பொதி அதிகமாக பேக்கரி நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் விலையை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
இதன்படி, பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.