இலங்கையில் கொரோனா தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக இறுதி முடிவுகள் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை எப்போது நீக்குவது என்பதை எதிர்வுகூற முடியாத நிலை தொடர்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாடுகளை நீக்க உகந்த சூழ்நிலைகள் இருந்தால், நீக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் அமுலாகும் பயணக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 7 மற்றும் 14 ஆம் திகதிகளில் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்படுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.