May 26, 2025 0:17:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒன்பது மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி!

மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது மருத்துவமனைகளே சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

குறித்த மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும், இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது

அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.