January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 400 ரூபாயால் அதிகரிக்க வேண்டும்’: அமைச்சர் குழு ஆலோசனை

இலங்கையில் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 400 ரூபாயால் அதிகரிக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிவாயு உற்பத்தி நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து மீட்பதற்கு விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்த அமரவீர, டலஸ் அலகப்பெரும, உதய கம்மன்பில, லசன்த அலகியவன்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு, உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளன.