January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்வதற்கான நுழைவுத் தடை ஜூலை 7 வரை நீடிப்பு

பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கையில் இருந்து பயணிக்கும் பயணிகள் எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் நுழைய முடியாது என்று எட்டிஹாட் ஏர்வேஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களில் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்தவர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைய முடியாது என்று அபுதாபியை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இராஜதந்திரி அல்லது ஐக்கிய அரபு எமிரேட் நாட்டவர் அல்லது கோல்டன் விசா வைத்திருப்பவர் என்றால் விமானம் புறப்படுவதற்கு அதிகபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர்.பரிசோதனையை செய்திருக்கவேண்டும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 12 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் தேசிய மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பயணிகளுக்கான நுழைவு இடைநிறுத்தப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் முதலில் அறிவித்திருந்தது.

அதற்கமைய தற்சமயம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், தென்னாபிரிக்கா, சாம்பியா, டி.ஆர். காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய 10 நாடுகளின் பயணிகள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.