January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சம்

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

அவை இந்தியாவில் கடலில் அழிக்கப்பட்டு வந்தவையா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வெற்று ஊசிகள்,மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை திங்கட்கிழமை (14) கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அவர் கடமை நிமித்தம் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் செவ்வாய்க்கிழமை (15) விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.