January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 57 கொவிட் மரணங்கள் பதிவு!

இலங்கையில் இன்று(14) மேலும் 57 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அசேல குணவர்தன உறுதிப்படுத்தினார்.

இன்றைய தினம் ஏற்கனவே  67 கொவிட்-19 மரணங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று (14) 2,259 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 225,897 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நாட்டில் மேலும் 1,917 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 190, 464 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே இன்று முதல் கொரோனா மரணங்கள் தொடர்பில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக 48 மணித்தியாலங்கள் அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் பதிவாகும் கொரோனா மரணங்கள் தொடர்பிலான விவரம், அன்றைய தினமே உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.