இலங்கையில், காலாவதியான மருந்துகளை புதிய திகதியிட்டு இரகசியமான முறையில் மீண்டும் பொதி செய்து கொண்டிருந்த ஒரு குழுவை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு, தெஹிவளை நெடுமால் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் இந்த மோசடி நடைபெற்றுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயது நபர் உள்ளிட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் போது காலாவதியான ஒருதொகை மருந்து பொருட்களும் திகதி மாற்றம் செய்யப்பட்டு சந்தைக்கு வெளியிட தயாரான நிலையிலிருந்த ஒரு கொள்கலன் மருந்து பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், இந்த மோசடி நீண்ட காலமாக நடந்து வருவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.