நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்படுமாயின் கொவிட் -19 வைரஸ் பரவல் குறைவடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களில் மிக வேகமாக கொவிட் -19 வைரஸ் தொற்று பரவியது. எனினும் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட பின்னர் வைரஸ் பரவல் வீதம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
மரணங்கள் அதிகரிக்க கடந்த கால மோசமான செயற்பாடுகளே காரணமாகும். ஆகவே இப்போது கையாளப்படும் கட்டுப்பாட்டு நிலைமையை தொடர்ந்து இரு வாரங்கள் நீடித்தால் நிச்சயமாக வைரஸ் தொற்றுப்பரவல் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதை நாம் அவதானிக்கின்றோம்.அதிக அச்சுறுத்தல் பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகள் ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமானால் அடுத்த கட்டத்தில் நாட்டில் வைரஸ் பரவலை கையாள்வது இலகுவாக அமையும் எனக் கூறியுள்ளார்.