இந்த வாரம் பெறப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை அடிப்படையாக வைத்துத்தான் அடுத்தவாரம் முதல் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் உண்மையான பிரதிபலனை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அறிந்து கொள்ள முடியும் எனறு அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது என்றும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் விரைவான அன்டிஜன் பரிசோதனைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
அதேபோல, விரைவான அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதால் மிகவும் ஆபத்தான தரப்பினருக்கு மாத்திரம் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.