January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா மரணங்களை அறிக்கையிடுவதில் புதிய நடைமுறை அமுல்!

கொரோனா மரணங்கள் தொடர்பில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக 48 மணித்தியாலங்கள் அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் பதிவாகும் கொரோனா மரணங்கள் தொடர்பிலான விவரம், அன்றைய தினமே உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கடந்த தினங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களும், அவை கொவிட் மரணங்களா என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அறிக்கை பிறிதொரு நாளில் வெளியிடப்பட்டு வந்தது.

இதில் சில குழப்பங்கள் காணப்பட்ட நிலையில், இன்று (14) முதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்கள் தொடர்பான விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கான புதிய பொறிமுறை ஒன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இதுவரை காலங்களில் கொவிட் மரணங்களை உறுதிப்படுத்தும்போது, முன்பு போல, முந்தைய நாட்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.