file photo: Sri Lanka Navy
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் தலைமை மாலுமி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் கப்பலின் கெப்டன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதோடு அவரின் கடவுச்சீடை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைமை மாலுமி, பிரதம பொறியியலாளர் மற்றும் பிரதி பொறியியலாளர் ஆகியோர் இலங்கையில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கப்பல் விபத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்படி மூவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர்.