January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை: இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட அகழ்வாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, எட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டட அகழ்வாராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.