May 3, 2025 22:47:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரிச் சலுகையில் எம்பிக்களுக்கு வாகனங்கள்: அரசாங்கத்தின் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது!

வரிச் சலுகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

இதற்கான நிதியை நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாஸ, அரசியல்வாதிகளின் வாழ்வை செழிப்பாக்குவதற்காக மக்களுக்குரிய வளத்தை பயன்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலாக, அவ்வாறான வளங்களை நாட்டின் மேம்பாட்டுக்கும், அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் முதலீடு செய்தல் வேண்டும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.