இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் அது தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த எரிபொருள் விலையாகவே உள்ளதாக மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
Even after increasing the fuel prices, Sri Lanka is having the lowest #prices in South Asia. #lka #SriLanka #southasia #FuelPriceSL pic.twitter.com/5V9CSklghf
— Ajith Nivard Cabraal (@an_cabraal) June 13, 2021
“எரிபொருள் விலையை அதிகரித்த பிறகும், இலங்கை தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருள் விலையைக் கொண்டுள்ளது” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல வாத பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டின் வங்கிக் கட்டமைப்பை பலப்படுத்தி வட்டி விகிதத்தை முறையாக பேணுவதற்கும், அந்நிய செலாவணியை பாதுகாக்கவும் மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றே இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.