January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது ஏன்?: ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கம்

இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒரு பிரதான காரணியாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் வங்கிக் கட்டமைப்பைப் பலப்படுத்தி வட்டி விகிதத்தை முறையாக பேணுவதற்கும், அந்நிய செலாவணியை பாதுகாக்கவும் மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றே இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜுன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் அது குறித்து விளக்கமளித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டு மேற்கண்டாவறு கூறியுள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பங்கேற்பில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவில் அவதானம் செலுத்தப்பட்ட பின்னரே, இங்கு அதன் விலைகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.