இலங்கை சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை சந்திக்கும் சந்தர்ப்பத்தை “சூம்” தொழில் நுட்பத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் முதல் கட்டமாக, இந்த திட்டம் வெலிக்கடை, அங்குனகொலபெலஸ்ஸ, பூசா உள்ளிட்ட ஆறு சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கைதிகள் மத்தியில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த திட்டமானது, எதிர்காலத்தில் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த குறிப்பிட்டார்.
கைதிகளின் சிறை இலக்கம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் தமது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேசமுடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.