January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் சூதாட்டம்: சுற்றிவளைப்பில் 14 பேர் கைது!

கிளிநொச்சி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 14 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய. மருதநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களினால் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் 4 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி செயற்பட்டமை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.