November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மருந்தக ஊழியர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்காவிட்டால் மருந்தகங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்’

தனியார் மருந்தகங்களின் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மருந்தகங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

மருந்தகங்களில் பணி புரிபவர்கள் கொவிட் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சந்திக்க நேரிடுவதால் அவர்களுக்கு கட்டாயமாக தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் ஊடகச் செயலாளர் சிதத் சுரங்க தெரிவித்தார்.

பயணத் தடை காலப்பகுதியிலும் மருந்தகங்களை திறந்து வைத்து பொது மக்களுக்கு சேவையாற்றி வரும் மருந்தக ஊழியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடிய போதும் இதுவரை சாதகமான பதில் ஏதும் வரவில்லை என தெரிவித்த அவர், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மருந்தக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.