May 25, 2025 6:17:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சினோபார்ம் தடுப்பூசி; 2வது டோஸ் வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில்- சுகாதார அமைச்சு

இலங்கையில் ‘சினோபார்ம்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 2வது டோஸ் வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகளை சுகாதார அமைச்சு பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

எனவே ‘சினோபார்ம்’ தடுப்பூசி குறித்து பொதுமக்கள் தேவையற்ற சந்தேகம் கொள்ள  வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு தடுப்பூசியின் 2வது டோஸை செலுத்துவதற்காக சுகாதார அமைச்சு 1,550,000 தடுப்பூசிகளை  பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதற்கமைய ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள திகதிகளில் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.