June 12, 2025 17:58:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பேக்கரி உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம்!

பேக்கரி உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.

பிரதான மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு மாவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் பேக்கரி உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை பேக்கரி பொருட்களின் உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக என்.கே. ஜயவர்த்தன சுட்டிக்காட்டினார்.

எனினும், பேக்கரி உணவு பொருட்களின் விலை உயர்வு குறித்து சங்கம் இறுதி முடிவு எடுக்கவில்லை என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.