‘பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானம்’ என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளதோடு,உங்களால் முடியவில்லை என்றால் முடியாது என்று கூறுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது.நீங்கள் ஒரு தேசிய அவமானம்.உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் முடியாது என்று கூறுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பான மற்றும் அபிவிருத்தியின் சகாப்தத்தை உருவாக்கும்.
— Sajith Premadasa (@sajithpremadasa) June 11, 2021
‘ பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேசிய அவமானம். உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் முடியாது என்று கூறுங்கள்.ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பான மற்றும் அபிவிருத்தியின் சகாப்தத்தை உருவாக்கும்.’ என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.