
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை பஸ் போக்குவரத்து சேவையைப் பாதிக்கும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
எரிபொருள் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தால் பஸ் போக்குவரத்து சேவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், லங்கா ஐஓசி எரிபொருள் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்ததாக அறிவித்துள்ளது.