
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 62 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 62 மரணங்களில் 7 மரணங்கள் மே மாதம் 8 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் ஏனையவை ஜூன் 1 முதல் 10 வரையிலும் பதிவானவையாகும்.
குறித்த காலப்பகுதியில் 35 ஆண்களும் 27 பெண்களும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று கொரோனா தொற்றுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகவில்லை என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.