
இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 157 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 184 ரூபாவாகும்.
அத்துடன் டீசல் லீட்டர் ஒன்று 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 111 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்று 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 144 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்று 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 77 ரூபாவாகும்.
இலங்கையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்களை செய்வதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு இன்று அனுமதி வழங்கியது.
உலகச் சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடையும் நிலையிலேயே இங்கு அதன் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.