January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் : இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!

இலங்கை துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’  கப்பலின் அனர்த்தததின் போது இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கையின்  பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவை சந்துத்து நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்திய தூதுக்குழுவுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயல்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டன.

அத்தோடு இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.