
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மே 21 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு ஜுன் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி இன்று மாலை அறிவித்துள்ளார்.
இதன்படி பயணக் கட்டுப்பாடு தளர்வின்றி 21 ஆம் திகதி வரையில் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.