கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவருடைய மனைவி ஜலனி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்படி, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற இருவரும், சிகிச்சைகளை நிறைவு செய்து கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவியும் வீடு செல்வதற்கு முன் கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களை பெற்றனர்.
பேராசிரியர் சங்கைக்குரிய அகலகட சிறிசுமன தேரர், சங்கைக்குரிய நீதியாவெல பாலித தேரர், சங்கைக்குரிய உங்கொட தம்மிந்தா தேரர்,கங்காராமை விகாரையின் சங்கைக்குரிய அஸ்ஸஜி தேரர் ஆகியோர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்களால் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்களுக்கும், சகல நாட்டு மக்களுக்காகவும் ஆசிர்வாதங்களை வழங்கியதோடு பிரித் அனுஷ்டானங்களையும் நிகழ்த்தினர்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் தனது எதிர்கால முயற்சிகளுக்காக தமது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் இதன்போது மகா சங்கத்தினர் தெரிவித்தனர்.