July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் செண்டோ ஹெரிஸ் காலமானார்!

இலங்கையின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் செண்டோ ஹெரிஸ் (Sando Harris) இன்று (11) காலமானார்.

இவர் தனது 58 ஆவது வயதில்  கொழும்பில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது திடீர் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளது.

மேடை நாடகங்களில் தனது நடிப்பின் ஊடாக அதிகம் பேசப்பட்ட இவர், பின்னர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் இவர் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இவர் நடித்த “டெத் வாட்ச்” (2013), மற்றும் பெம் மால் மாலா (1997) ஆகிய படைப்புக்கள் அதிகம் பேசப்பட்டவை.