November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிய பின்னரே நான் ஏற்றிக்கொள்வேன்’: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றிமுடிக்கும் வரையில் நான் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சஜித் பிரேமதாசவும் அவரது மனைவியும் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தனர்.

இந்நிலையில் இன்று (11) கங்காராம விகாரைக்குச்சென்று வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகெண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத காரணத்தினாலேயே எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் வைரஸ் தாக்கத்தினால் நாம் நாடென்ற முறையில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்த சவால்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் அனைவரும் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும். சகல மக்களும் ஒன்றிணைந்து இதற்கான முயற்சிகளை கையாள வேண்டும்.

கொவிட் -19 வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாது நிராகரித்தமையே எனக்கும் எனது மனைவிக்கும் கொவிட் தொற்று ஏற்படக் காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முன்னர் நாட்டு மக்கள் சகலருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே இன்னமும் நாம் தடுப்பூசி ஏற்றாது உள்ளோம்.

இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.