November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலை இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது

சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கையின் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று காலை அதனை திறந்து வைத்தனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் சீன அரசாங்கத்தின் 12 பில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் ‘சீன – இலங்கை நட்புறவு வைத்தியசாலை’ என்ற பெயரில் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்றைய தினத்தில் அந்த வைத்தியசாலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடியதாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.