இலங்கையின் வடக்குக் கடலில் மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களை விருத்திச் செய்யும் நோக்கில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயன்பாட்டுக்கு உதவாத பேருந்துகளை கடலில் இறக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளம் கண்டு, குறித்த பிரதேசத்தில் பேருந்துகளை இறக்கி மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் கடற்படையின் ஒத்துழைப்புடன் வடக்கு கடலில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டமாக சுமார் 40 பேருந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.