File photo
இலங்கை முழுவதும் வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு போராட்டத்த ஆரம்பித்துள்ளதாகவும், இது நண்பகல் 12 மணி வரையில் தொடரும் என்றும் சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தாலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்தல், அவசர சேவைகள் ஆகியனவற்றில் தமது ஊழியர்கள் கடமையில் இருப்பார்கள் என்று சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் அசமந்தப் போக்கில் செயற்படுவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.