
இலங்கையில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 14 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.
மே 21 ஆம் திகதி தொடக்கம் இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டதுடன், அதனை ஜுன் 14 ஆம் திகதி தளர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் 14 ஆம் திகதிக்கு பின்னரும் கட்டுப்பாடு தொடரும் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அது தொடர்பாக இன்று மாலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.