கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்ட போதிலும், கடந்த மே மாதம் இலங்கைக்கு 1,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் சீனா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தே வருகை தந்துள்ளனர்.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் 4,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்றும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 15,294 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதில் கஸகஸ்தான், ஜேர்மனி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.