
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனம் வெற்றிடமாக இருக்கும் நிலையில், அப்பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இத்தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவித்ததாகவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு பதிலளிக்க முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.